Monday, January 11, 2010

மனவமைதியும் மனமகிழ்ச்சியும் மனிதனுக்கு எப்படிக் கிட்டும்?





19 மஹாராஜா சூர்யாசாலை சென்னை-18-க்குச் சென்றால் 85-90 வயதுடைய ஒரு மாமனிதரைப் பார்க்கலாம்.அவரது திருநாமம், முத்துக்குமார சுவாமித் தம்பிரான்!

அவருக்கும் சைவத் திருமடங்களில் முதலாவதான திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் ஓர் நெருங்கிய தொடர்பு உண்டு.

இன்று பட்டத்தில் இருக்கும் மேற்படி ஆதீனத்திற்கும் இவருக்கும்தான் போட்டா போட்டி -பதவியைக் கைப்பற்றுவதில்!அந்தக் காலத்தில்!

அந்தப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்டவர்தான் இந்தப்பெரியவர். இவர் தங்கியிருக்கும் இடம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து தந்தது. நினைவில் வாழும் குன்றக்குடி அடிகளாருக்கும் அதில் பங்குண்டு.

திருவாவடுதுறை ஆதீனச் சொத்துக்க்களில் ஒரு பைசா கூட வாங்காமல், ஆதீனப் புகழ் பரப்பும் மெய்யான ஆன்மீகவாதி. அங்கு பலர் அவரிடம் வந்து அருளாசி பெற்றுச் செல்வது வழக்கம். செல்லும் நேரத்தைப் பொறுத்து விருந்தோம்பல் அட்டகாசமாக இருக்கும். அவர் உண்பதை நமக்கும் கொடுத்து மகிழ்வார். பரமசிவம் என்பவர் அவரது உதவியாளர். அவர் சமையலிலும் நளன்.


வருகை தந்த 60 வயதுடைய ஒருவர் முத்துக் குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகளிடம் சிவபெருமான் தரிசனம் எப்படிக் கிடைக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரைத் தொட்டபோது விளைந்த தெய்வீக அனுபவத்தைத் தாங்கள் எனக்கு ஏற்படுத்தித் தர இயலுமா? என்று கேட்டபோது ஐந்து எதிர்க் கேள்விகளை எழுப்பினார். அதனை அப்படியே தருகின்றேன்.

1. சைவ நெறியில், ஐந்தெழுத்து மந்திரம் முக்கியமானது. அதனை எத்தனை முறை பக்தியுடன் தியானித்திருப்பீர்கள்?

2.இறைவனது அளப்பரிய ஆற்றல் குறித்தும், அவனது அருட் கருணைத் திறம் குறித்து எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

3.ஏதாவதொரு ஒழுங்கு முறையில் தொடர்ச்சியாகத் திருக்கோவில் வழிபாடு செய்ததுண்டா? (தினம்/வாரம் ஒரு முறை/மாதம் ஒரு முறை)

4. மலர் தூவித் தெய்வத்தை வீட்டிலாவது வழிபாடு செய்தது உண்டா?

5. நெற்றியில் திருநீறு-விபூதி அணியும் வழக்கமாவது உண்டா?

எல்லாவற்றிற்கும் வந்தவரால் சரியான பதிலைக் கூற இயலவில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதிரி வாழ்ந்த ஒருவரால் எப்படிச் சரியான பதிலைக் கூற முடியும்.?

முந்திரிக் கொட்டையான நான், இடையில் புகுந்தேன். ஐயா! ஆத்திகவாதியோ/நாத்திகவாதியோ வாழ்க்கையின் எல்லாக் காலத்திலும் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது. இதுதான் எனது வாழ்நாளில் நான் கண்டது என்றேன்.

அமைதியும் மகிழ்ச்சியும் முறையான வாழ்க்கை இருந்தால் கிட்டும். இறை நம்பிக்கையும், இறை வழிபாடும் முறையான வாழ்க்கைக்குத் துணை செய்யும்.

சைவ சமய குரவர்கள்- ஞானசிரியர்கள் நால்வருள் ஒருவரான அப்பர் சுவாமிகள்-திருநாவுக்கரசர் பாடலை எடுத்துச் சொல்லி விளக்கமும் தந்தார், தம்பிரான் சுவாமிகள்!

அந்தப் பாடலை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசாராகில்
ஒருநாளும் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன்முன் மலர்பறிதிட் டுண்ணாராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியாராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோஎன்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே!. "
-திருத்தாண்டகம். ( தனித் திருத்தாண்டகம் பாடல் எண் 934 )

ஒன்று மட்டும் புரிகின்றது. எல்லோரும் எல்லா அனுபவத்தையும் பெற்றுவிட முடியாது. அறிவியலார் கண்டறிந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதுபோல். "மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம்" என்று கொண்டால் மனவமைதியும் மனமகிழ்ச்சியும் நிச்சயம்!

தாலி கட்டிய கணவனிடம் விவாகரத்துக் கோரியதோடும், வரதட்சணைக் கொடுமைப் புகாரோடும் நிறுத்திக் கொண்டிருக்கலாம். அந்தத் திருநெல்வேலி மாவட்டத்துப் பெண்மணி.

அவரது சகோதரர் தாலி கட்டிய மைத்துனரைத் திட்டமிட்டுத் தாக்க ஏன் முயற்சிக்க வேண்டும். இரண்டு முறை தப்பித்தவரை மூன்றாவது முறை தீர்த்துக் கட்ட ஏன் முடிவெடுக்க வெண்டும்?


அந்த முடிவின் செயல்பாடு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபரான 44 வயதே உடைய வெற்றிவேலை ஏன் மரணிக்கச் செய்யவேண்டும்?
விதி வலியதுதானோ?

அந்த திருநெல்வேலி சிவகாமி சிவசுப்பிரமணியத்தைப் பேட்டி கண்டு எழுதுவதன் மூலம், வாடகை மனைவி புரோக்கர்களின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் (பாவக்)கறையைப் போக்கிக் கொள்ளலாம்.
கணவன்-மனைவி இணந்து வாழப் பிடிக்கவில்லையா பிரிந்துபோய் விடுங்கள். எல்லாவற்றயும் விட மனித உயிர் மிக மிக உயர்ந்தது. விலை மதிப்பற்றது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.