Thursday, January 13, 2011

வலைப்பதிவாளர்கள் முகவரிப் பட்டியல் தயாரிப்புப் பணி தொடர்கிறது.!

சென்ற ஆண்டின் சிறந்த வலைப்பதிவாளர்கள் வரிசையில் தமிழ் மணம் வலைச்சரத்தைப் பத்தாவாதாகத் தேர்வு செய்துள்ளது.

இந்த வலைச்ச்சரம் வாரம் ஒரு மலரை வெளியிடுகின்றது. எதற்காக?
பிற பதிவர்களை அறிமுகப் படுத்துவதே அதன் உள்ளடக்கம். மலரைத் தயாரிப்பது வாரத்திற்கொரு வலைப்பதிவர் என்பது ஓர் சிறப்பு. இதுவரை மூன்று மலர்கள் மலர்ந்துள்ளன.

சீனா, பொன்ஸ்பூர்ணா, கயல்விழி முத்துலட்சுமி, தமிழ்ப் பிரியன் ஆகியோரைக் கொண்ட குழுவினரது பாரட்டத்தக்க முயற்சியில் பணி தொடர்கின்றது.


சந்திரமதி கந்தசாமி, ௮௪௧ (எண்ணூற்று நாற்பத்தொன்று) வலைப்பதிவர்களை அகர வரிசையில் தொகுத்துள்ள தகவலை வலைச்சரம் தருகின்றது. இம்முயற்சி ௨00௫-ல் நிகழ்ந்தது. tamilbloggers.blogspot.comசென்றால் கண்டு மகிழலாம்.

தமிழ் மணத்தின் பூங்கா, ஆங்கிலப் பதிவர்களையே முன்னிலைப்படுத்திக் காட்டும் கில்லி, மூலம் snapjudgementமூலம் பாஸ்டன் பாலா வலைப்பதிவர்களை பட்டியலிடும் தகவலையும் தருகின்றது.

வலைச்சரத்திற்குப் பாராட்டுரை எழுதிட முனைந்தபோது அறிமுகமானது,
தமிழ் கணிமை என்றதொரு புதையல்.

கணிமை ஓர் மெகா திரட்டி. வலைவாசல், வலைப்பதிவுகள், செய்தித் தாள்கள், மின்னிதழ்கள் அனைத்தயும் திரட்டித் தருகின்றது.

இவர்கள் அனைவரையும் தொடர்புகொள்ளும் முயற்சி தொடர்கின்றது.

அனைத்து வலைப்பதிவாளரது ஆதரவும் ஆலோசனையும் வேண்டப்படுகின்றது.

1 comments:

Kindly post a comment.