Friday, August 31, 2012

இந்திய அமெரிக்கரின் டாகுமென்ட்டரி 2016, அடுத்த அமெரிக்கத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் ?


Anti-Obama film by Indian-American makes waves before US polls



தினேஷ் டிசோசா மும்பையில் பிறந்தவர். அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அமெரிக்க இந்தியர்.

இவர் 2016-ஒபாமாவின் அமெரிக்கா என்ற பெயரில் ஒரு டாகுமென்டரிப் படம் எடுத்துள்ளார். இப்படம் அமெரிக்காவில் 1091 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மீண்டும் 1800 திரைப்படங்களில் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் வசூல் கிடைத்து வருவதாகக் கூறப் படுகின்றது. வார இறுதிகளில் 6.2 மில்லியன் டாலர் வசூலாகியுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் சராசரியாக 5940 டாலர் வசூலாகி வருகின்றது.இந்த ஆண்டிம் மிகப் பெரிய வசூலை ஈட்டிய டாகுமெண்டரிப் படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. 

இப்படத்தை, ஜெரால்ட் மோலன், டோக் செய்ன், ஆகியோர் தயாரித்துள்ளனர்.கான் செல்லிவனுடன் இணைந்து ..தினேஷ் டிசோசா  இப்படத்தை இயக்கியுள்ளார்.

குடியரசுக் கட்சியிம் மாநாடு தற்போது புளோரிடாவில் நடந்துவருகின்றது.
டாகுமென்டரி படத்தில் ஈடுபட்ட அனைவரும் தற்பொழுது புளோரிடோவில்தான் குவிந்துள்ளனர்.

அமெரிக்க இந்தியரான தினேஷ் டிசோசாவின் டாகுமெண்டரி ஒபாமைப் பெரும் சரிவுக்குள்ளாக்கும் என்று தெரிய வருகின்றது.

பிழைக்கச் சென்ற நாட்டில் அஞ்சாநெஞ்சனாக, காலம், இடம், பொருள், ஏவல் கருதிச் செயல்படும் செயல் வீரன், தினேஷ் டிசோசாவைப்போன்றோர் இந்தியாவில் - தமிழகத்தில் யாருமே இல்லயா?

வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் கீற்று, பலரது கூட்டணி பலத்தால்தான் இணையத்தில் வலம் வருகின்றது. அடித்தட்டு மக்களின் குறைபாடுகளைக் குறும்படங்கள் பல நன்றாகப் பிரதிபலிக்கின்றன. அடுத்த தேர்தலுக்குமுன் எடுக்கப்படும் ஒரே ஒரு திரைப்படம் தமிழகத்தின் தலை எழுத்தை ஏன் மாற்றியமைக்கக் கூடாது ?  பூனைக்கு மணி கட்ட யார் முன்வருவார்? ஆயிரம் கூட்டங்களில் அடிவயிற்றிலிருந்து ஓசை எழுப்பிப் பேசும் எதிரணித் தலைவர்களில் ஒருவர் ஒருவர் டாகுமெண்டரிப் படத் தயாரிப்பில் இறங்கலாமே !

 திருக்குறள், இடன் அறிதல், பாடல்-7. 

அஞ்சாமை அல்லால் துணை வேண்டா, எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின் 

நன்றாக  ஆராய்ந்து ஒன்றச் செய்வார்க்கு,

அஞ்சாமையைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை.

-சாமி சிதம்பரனார்- 
கண்ணப்பன் பதிப்பகம்
- 044-22310805





0 comments:

Post a Comment

Kindly post a comment.