Tuesday, August 14, 2012

மலைவிழுங்கி மகாதேவர்கள் !


 நன்றி: தினமணி ஃபோட்டூன்
அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள்நாட்டையே வியாபாரம் பேசும்போது...நாட்டையே விற்றுக் கொண்டிரும்போது...வியாபாரிகள் நாங்கள் அதன் அடையாளத்தை பேரம் பேசி விற்றுக் கொண்டிருக்கின்றோம்!....




Now this is important since Wal-Martis in every corner of every American ...


அமெரிக்கா முழுவதும் வியாபித்துள்ள  வால்மார்ட் நிறுவனம் :-

இதன் வருவாய் நார்வே நாட்டினும் பெரியது. நார்வே நாட்டின் ஜி.டி.பி.41,446 கோடி டாலர். வால்மார்ட் நிறுவனத்தின் வருவாய் 42,189 கோடி டாலர்.இந்த ந்றுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 25 வது இடத்தைப் பெறுகின்றது. 

இந்த மலை விழுங்கி மகா தேவனான வால்மார்ட்டை எப்படியாவது இந்தியாவில் தாராளமாகக் கடை விரிக்கச் செய்ய ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் காவடி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அது வந்தால், இந்தியாவில் உடனடியாக 4 கோடித் தொழிலாளர்கள் நடுத் தெருவிற்கு வருவார்கள். மெல்ல மெல்ல இந்த மலைப்பாம்பு இந்தியாவையே விழுங்கிவிடும் 


எக்ஸான் மொபில் நிறுவனம் :-

தாய்லாந்தின் ஜி.டி.பி. 31,885 கோடி டாலர். எக்ஸான் மொபில் வருவாய் 35,467 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகள் வரிசையில் 30-வது இடத்தைப் பெறும்.

கோன்கோ ஃபிலிப்ஸ் நிறுவனம்.:-

பாகிஸ்தானின் ஜி.டி.பி. 17,487 கோடி டாலர். கோன்கோ ஃபிலிப்ஸின் வருவாய் 18,497 கோடி டாலர். இந்நிறுவனம் உலகின் பெரிய நாடுகள் வரிசையில் 48-வதாக வருகின்றது.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் :-

நியூசிலாந்தின் ஜி.டி.பி. 14,043 கோடி டாலர். ஜெனரல் எலெக்டிரிக்கின் வருவாய் 15,163 கோடி டாலர். உலகின் பெரிய நாடுகள் வரிசையில் 52-வது இடத்தைப் பெறும்.

பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனம் :-

ஹங்கேரியின் ஜி.டி.பி. 12,896 கோடி டாலர். ஹாத்நய் வருவாய் 13,619 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 57 வது இடத்தைப் பெறும்.


ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்:-

பங்களாதேஷின் ஜி.டி.பி. 10,492 கோடி டாலர். ஜெனரல் மோட்டார்ஸ் வருவாய் 13,559 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 58-வது இடத்தைப் பெறும்

பேங்க் ஆஃப் அமெரிக்கா :-

வியத்நாமை விடப் பெரியது. வியத்நாமின் ஜிடிபி 10,357 கோடி டாலர். பேங்க் ஆஃப் அமெரிக்காவின் வருவாய் 13,449 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 59-வது இடத்தைப் பெறும்.

ஃபோர்டு நிறுவனம் :- 

மொராக்கா நாட்டை விடப் பெரியது. மொராக்காவின் ஜிடிபி 10,348 கோடி டாலர். ஃபோர்டின் வருவாய் 12, 895 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 60 வது இடத்தைப் பெறும்.


வெல்ஸ் ஃபார்கோ நிறுவனம் :-

அங்கோலா நாட்டை விடப் பெரியது. அங்கோலாவின் ஜிடிபி 8626 கோடி டாலர். வெல்ஸ் ஃபார்கோ நிறுவனத்தின் வருவாய் 9,325 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 62 வது இடத்தைப் பெறும்.

பிராக்டர் & கேம்பிள் நிறுவனம் :-

லிபியா நாட்டைவிடப் பெரியது. லிபியாவின் ஜிடிபி 7,423 கோடி டாலர். பிராக்டர் & கேம்பிள் வருவாய் 7,969 கோடி டாலர். இந்த நிறுவனம் உலகின் பெரிய நாடுகளின் வரிசையில் 64 வது இடத்தைப் பெறும். 


 ( Gross Domestic Product. --- மொத்த உள்நாட்டு மதிப்பு ) 

உலகமயமாதல் பெரிதும் பயனடைந்திருப்பவை பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள்தான்.

தாராள மயம், தடையில்லா வணிகம் ஆகியவற்றால் கொழுத்துப் பெருத்துக் 

கொண்டிருக்கின்றன. 

இந்த லட்சணத்தில் அந்தக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் கதவுகளை ஏன் அகலத் 

திறந்து  வைக்கவில்லை என்பதுதான் அமெரிக்காவின் ஒரே கேள்வி.

ஒரு சில பன்னாடு நிறுவனங்களின் முகவிலாசத்தை அகில இந்திய வங்கி ஊழியர் 

சங்கம் மேற்கண்டவாறு படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது.

தகவல் உதவி :- NEW AGE மொழியாக்கம் சோமு. ஜனசக்தி  14-08-2012 



wal-mart opens shop in india

By allowing Wal-Mart to sell only to wholesalers, the Indian government hopes to protect smaller merchants like the one shown here. Photo: <a href="http://www.flickr.com/photos/nzdave/2554944835/">(nz)dave (flickr)</a>
By allowing Wal-Mart to sell only to wholesalers, the Indian government hopes to protect smaller merchants like the one shown here. Photo: (nz)dave (flickr)
Wal-Mart has long been a source of controversy, but the July opening of the chain's first store in India was greeted relatively warmly and drew huge crowds in its opening days, the Washington Post reports.
Wal-Mart India isn't the same as the American version. The store goes by the name Best Price Modern Wholesale, which reflects the fact that Wal-Mart India is a joint venture with Indian business conglomerate Bharti Enterprises. Another difference is that the store is open only to wholesale customers like hotel and restaurant owners, and their friends and family. Time reports that India's commercial laws prevent international retailers from directly competing with domestic businesses.
The flagship store is located in Amritsar, in the northwestern Indian state of Punjab. The arrival of Wal-Mart has created curiosity and interest, which the Washington Posthighlights through one customer's reaction:
"In Punjabi, we have an expression: When there is a wedding, everyone flocks to see the new bride," said Kamal Gambhir, a wholesaler whose congested offices are located in this city's oldest bazaar. "I myself had returned from a trip and came back to hear little children asking, 'Where is the new Wal-Mart?' I told them it's on our most historic road."
As the largest retailer in the world, Wal-Mart has raised concerns in India about the store's consequences for smaller retailers and the vendors found in community markets. According to American Public Media's "Marketplace," some worry Wal-Mart's presence will raise business owners' profits while less-connected and poorer members of society are hurt by the new competition.
Wal-Mart says it will build 10 to 15 stores in India over the next three years.
2010, 2011, 2012  தகவல்கள் ???






0 comments:

Post a Comment

Kindly post a comment.