Tuesday, October 30, 2012

”பாவையர் மலர்” வான்மதி கன்டெய்னர் நகரை நிர்மாணிக்கட்டும் !



 
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கைப்ப் பாதையில் புதிய  திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு தளர்ச்சியடைந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிவிடாமல் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகளிலும் ஈடுபட வேண்டும்.

அப்படிப்பட்ட துணிச்சலும் திறமையும் கொண்டதொரு பாரதி விரும்புகின்ற புதுமைப் பெண்ணின் அறிமுகம் அண்மையில் கிடைத்தது. எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மதுரா ட்ராவல்ஸ்  கலைமாமணி வீ.கே.டி. பாலனைப்  பொது வாழ்க்கையில் சிறிதேனும் அக்கறை கொண்டோர் அனைவரும் அறிந்திருப்பர்.

ஏனெனில், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சக்கட்ட நிலையை திட்டமிடுதலாலும், முயற்சியாலும் எய்தியவர். இந்நிலையில், அவர் ஆண்டுதோறும், தன் மகன், பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்ட்டாடி வருகின்றார்.

மெய்யான மானுட விசுவாசியைத் தேடிப்பிடித்து, மேடை ஏற்றி, மதுரா மாமனிதர் என்ற பட்டமும் ஒரு லட்சம் பணமுடிப்பும் வழங்கி வருகின்றார். சென்ற 22 தேதி இவ்வாண்டும் அதே போன்று விழா நிகழ்ந்தது. பரிசு பெற்றவர், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் நோவா அவர்கள். அவரது சாதனை, சிறைக்கைதிகள் பலரைப் பட்டதாரிகளாக்கியது. அவர்களில் சிலர் பல்கலைக் கழகங்களில் சில துறைகளுக்குத் தலைவர்களாகவும் உள்ளனர். சிரைக்குச் சென்றோருக்கு வேலை கிடைப்பதே கடினம். குடும்பம் எப்படி அமையும்? எனவே, அவர்களது வாரிசுகளுக்குள்ளேயே குடும்பப்பப் பிணைப்பையும் ஏற்படுத்தி வைத்தார். ஒவ்வொரு திருமணமும் அந்த மாவட்டக் கலெக்டர் தலைமையில், நீதிபதிகள் முன்னிலையிதான் நடக்கும். நோவா குறித்து மேலும் அறிந்து கொள்ள,

http://rssairam.blogspot.in/2012/10/go-ms-no-1244-dt-19-04-1982.html

 சிறைக்குள் சென்று சேவை செய்திட, எம்.ஜி..ஆர் அளித்த அரசு ஆணை :G.O. MS. NO. 1244 Dt. 19-04-1982 & ” மதுரா மாமனிதர்” பட்டத்துடன் ஒரு லட்சம் பரிசு பெற்றவர் !
                      ”மதுரா மாமனிதர்” நான்காம் ஆண்டு விழா ! சென்று காண்க.

இந்த விழாவில்தான் அந்த “பாவையர் மலர் “ ஆசிரியப் பெண்மணியைக் கண்டேன். பெரிய நிறுவனங்கள் நடத்துகின்றனவற்றை விட மிகவும் தரமுள்ள  மாத இதழாகவே அது இருந்தது. அந்தப் புத்தகத்தை அவர் கொடுத்திராவிட்டால், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே கிடைத்திருக்காது.

புதிதாக வரும் தமிழ் இதழ் எதுவாக இருந்தாலும் முதலில் வாங்கிப் படிப்பேன். நன்றாக இருந்தால் தொடர்ந்து வாங்குவேன். இல்லை என்றால் வாங்குவதை நிறுத்தி விடுவேன். பாவையர் மலர் என் பார்வையில் படாமற் போனது ஏனோ தெரியவில்லை. ஒரு வேளை, எங்கள் பகுதிக்கு இன்னும் அறிமுகமாகாமல் இருக்கக்கூடும்.

நேற்று, மனைவியுடன் கடைக்குச் சென்று திரும்பும்போது சில்லறை தேவைப்பட்டது. 10ரூபாய் கொடுத்து குங்குமம் வாங்கினேன். சில காலம், என் திண்டுக்கல் நண்பர், கெளதம் அதில் ஆசிரியராக இருந்தார். அதனால் அதனை வாங்கினேன். 

வீட்டிற்கு வந்து புரட்டிக் கொண்டிருந்தபோது,  அந்த விழாவில் சந்தித்த பெண், கன்டெய்னர் வீட்டு முன்னால் நின்று கொண்டிருந்த படம் இடம்பெற்றிருந்தது. 4 பக்கக் கட்டுரையும் இருந்தது. தந்தை ய்டன் நெய்வேலியில் வழ்ந்தது, தந்தையின் திடீர் மரணம், வேலை பார்த்துக்கொண்டே படிப்பை முடித்தது, கன்டெய்னர் கம்பெனியில் வேலைக்குச் சென்றது,  உரிமையாளருக்கு நெருங்கிய உயர் நிலைக்கு வளர்ந்தது, ஒரு கட்டத்தில், கோவைக் கிளையின் பொறுப்பாளராகத் தந்த பதவி உயர்வு காரணமாக வேலையை விட்டது என கட்டுரை தொடர்ந்தது.

பின்னர், கன்டெய்னர்களை வாங்கிச் சரிப்படுத்தி விற்கும் வேலையில் சொந்தக் கம்பெனியே தொடங்கி விடுகின்றார். இளம் வயதிலிருந்தே உடன் படித்த நண்பரையே காதலித்துத் திருமணமும் செய்து கொள்கின்றார். வேறு எப்படியெல்லாம்  கம்பெனியை வளர்க்கலாம் என்ற  எண்ணத்தின் வெளிப்பாடே கண்டெய்னர் வீடுகள். சகல வசதிகளும் உண்டு. புதிய கட்டிடங்களக் கட்டிக் கொடுக்கும் கான்ட்ராக்டர்களுக்கு இது நன்கு பயன் படுகின்றது. ஓரிடத்தில் வேலை முடிந்தவுடன், அடுத்து வேலை நடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றனர் . என்றெல்லாம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. அடுத்து, ட்யூசன் சென்டர் போன்றவற்றைச் செய்து குடிசைவாழ் மக்கல் வாழும் பகுத்திக்குத் தரப்போவதாகப் மகிழ்ச்சியோடு கூறுவதாகக் கட்டுரை முடிக்கப் பெற்றிருந்தது.

அவருடன் தொடர்பு கொண்டு படத்தைப் பெற்றுப் பதிவிட விருப்பம். இயலவில்லலை. எனவே, கணினியில் கிடைத்த கன்டெய்னர்ப்  படங்களுடன் இந்தப் பதிவு. விவரங்களுக்கு இந்தவாரக் குங்குமம் படிக்கவும்.

தொடர்ந்து முயன்று ஏழை வாழ் மக்களைக் கொண்ட கன்டெய்னர்க் காலனி, கன்டெய்னர் ஊர், கன்டெய்னர் நகரம் என்று அவர் வளர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

இத்தகைய பெருமைகளுக்கெல்லாம் சொந்தமாக்கிக் கொண்டவர்  பெயர், வான்மதி. காதல்மணம் புரிந்த கணவர் பெயர், மணிகண்டன்.

வானம் வசப்படும் என்பது இதுதானே ?

பாவையர் மலர்,

55, வ.உ.சி.நகர், மார்க்கெட் தெரு,

தண்டையார்ப்பேட்டை,

சென்னை, 600 081

ANdus sawthaa ruu.120/-

AyuL sawthaa ruu.2000/-

 pavaivanmathi@yahoo.com

mwccvm2yahoo.co.in                                                                                                                    


0 comments:

Post a Comment

Kindly post a comment.