Tuesday, October 23, 2012

சிறைக்குள் சென்று சேவை செய்திட, எம்.ஜி..ஆர் அளித்த அரசு ஆணை :G.O. MS. NO. 1244 Dt. 19-04-1982 & ” மதுரா மாமனிதர்” பட்டத்துடன் ஒரு லட்சம் பரிசு பெற்றவர் !

                      ”மதுரா மாமனிதர்” நான்காம் ஆண்டு விழா !


பாலம் கல்யாணசுந்தரம், வீ.கே.டி.பாலன், அமர் சேவாசங்கம் எஸ்.இராமகிருஷ்ணன்,  பரிசு பெறும்  பேராசிரியர் எஸ்.டி. நோவா, கெளசல்யா

சென்ற 30 ஆண்டுகளாக அணைக்கும் கரங்கள் தொண்டு நிறுவனம், அந்தமான் உள்ளிட்ட இந்தியச் சிறைகளில் ஆற்றிய அரும் பணிகள் !.

சென்னைச் சிறையில் இருந்த ஆயுட்காலச் சிறைக் கைதி, இன்று டாக்டர். சுந்தரம், எம்.பி.பி.எஸ்.

திருச்சி சிறையில் ஆயுட் கைதியாய் இருந்தவர், இன்று, மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியர், பால்ராஜ் ஜோசப் !

சிறைச்சாலைக்குள் தக்க பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புக்கள் நடத்தி, பாட சம்பந்தமான தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, தொலை தூரக் கல்வி மூலம் 6, 7, 8, -வது அஞ்சல் வழி மற்றும் + 2 வகுப்பு, B.A., M.A., M.Sc. M.Com, B.B.A. B.L., Ph.D. பட்டங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 8650.

சிறை நண்பர்கள், மற்றும் விடுதலை பெற்றோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களில் பெண் எடுத்தும், பெண் கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்  நடத்தி வைக்கப்பட்ட  ஒற்றுமைத் திருமணங்களின் எண்னிக்கை 1225..                           

விடுதலை பெற்றோர், பாதிக்கப் பட்டோர், பகை நீங்கி ஒற்றுமையுடன் வாழ அவரவர் கிராமங்களில் நடத்தி வைக்கப்பட்ட சமாதானக் கூட்டங்களின் எண்ணிக்கை 620.                                                             

கண், காது, மூக்கு, தொண்டை, இருதயம், மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்திட சிறப்பு டாக்டர்களை  சிறைக்குள் அழைத்துச் சென்று  இலவச மருந்துகள் வழங்கி, சிறைக்குள்ளேயும், விடுதலை பெற்றோர், பாதிக்கப்பட்டோர் மத்தியிலேயும் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 930.

கண் டாக்டர்களால் தக்க பரிசோதனை செய்யப்பட்டு இதுவரை சிறைக்குள் வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளின் எண்னிக்கை 9480.

நாடகங்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கள், பாடல் போட்டிகள்  மாறு வேடப் போட்டிகள் மற்றும் பட்டி மன்றங்கள், சிறைவாசிகளிடையே  நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்ட   கலைநிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 4320.

ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலங்களில் சிறப்பு உணவு வழங்கிய நிகழ்ச்சிகள் 2321.

தகுந்த வல்லுநர்களைச் சிறைக்குள் அழைத்துச் சென்று தொழிற்பயிற்சி கொடுக்கச்செய்து அதனால் பயனடைந்தோர் 2340.

சிறைப்பட்டோர், பாதிக்கப்பட்டோர், குழந்தைகளைப் பள்ளிகளிலும் விடுதிகளிலும் சேர்த்து இலவசச் சீருடைகள் மற்றும் பாட சம்பந்தமான தேவைகளை வழங்கிப் பராமரிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 950.

விடுதலை பெற்றோர்களுக்கு , சைக்கிள்கள், தையல் மெஷின்கள், கிரண்டர்கள், அயர்ன் பாக்ஸ்கள், மண்வெட்டிகள் மற்றும் இரும்புச் சட்டிகள் என தொழில் தொடங்க  உதவிகள் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை, 2640.


         அணைக்கும் கரங்கள், பேராசிரியர், எஸ்.டி.நோவா அவர்களுடன் வலைப்பதிவாளர்

மனம் மாறுதல் என்பது வேறு; மனம் திரும்புதல் என்பது வேறு. மாறிய மனம் மாறிக்கொண்டே இருக்கும். இன்று முதல் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்பவர்கலே அதற்கு உதாரணம். திரும்பிய மனம் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பவே திரும்பாது. அதனால்தான் விவிலியம் கூட, “மனம் திரும்பு “ என்று கூறுகின்றது. அணைக்கும் கரங்களின் 30 ஆண்டுகால சேவைகளைப்பற்றி முழுமையாகக் கூற வேண்டும் என்றால் அது ஒரு மகாபாரதம் / இராமாயணம் / சிந்துபாத் கதை போன்று விரிந்துகொண்டே போகும். எனவே, இத்துடன் முடித்துக் கொண்டு, அணக்கும் கரங்களின் அச்சாணி யாரென்று பார்ப்போம்.

30-35 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் கல்லூரிப் பேராசிரியர்கள் பணிப் பாதுகாப்புக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் சிறைச்சாலைக்குள்ளும் செல்ல நேர்ந்தது. 15-க்கும் மேற்பட்ட நாட்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் சிறைவாசத்தை அனுபவிக்கவும் நேர்ந்தது. உள்ளே நடக்கும் கொடுமைகளைக் கண்டு உள்ளம் கொதித்தனர், பேராசிரியர்கள். ஆனால், ஒருவர், கொதித்ததோடு அடங்கிப் போகவில்லை.

 சிறு சிறு திருட்டுக்களால் பாதிக்கப்பட்டு உள்ளே சென்றவர்களை, கொலை-கொள்ளை போன்ற பெரிய குற்றங்களைச் செய்து விட்டு உள்ளே இருக்கும் தாதாக்களின் போதனைகளால் பெரிய குற்றவாளிகளாக வெளியே வருகின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தது.

ஜெயில் என்பது, "correctional institutions" -தான், இங்கே கொடியவர்களாக மாற்றப்பட்டு வெளியே வருகின்றனர்,

இந்நிலையை மாற்றிட வேண்டும் என்று அப்போதையத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதினார். என்ன செய்யவேண்டும் ? என்று உடனே பதில் கடிதம் வந்தது, எம்.ஜி.ஆரிடமிருந்து. மாதத்தில் சில நாட்கள் சிறைக்குள் சென்று அவர்களுடன் கலந்து பழகிட வாய்ப்பளிக்க வேண்டும், என்றார், அவர். உடனே அனுமதி ஆணையை எம்.ஜி.ஆர். பிறப்பித்தார்.  அந்த ஆணை எண் :- G.O.M.S.No.1244 Dated 10-04-1982.



அரிதின் முயன்று அந்த ஆணையைப் பெற்றவர்,முனைவர், பேராசிரியர், S.T. நோவா, தமிழ்த்துறைத் தலைவர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. 32 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அவரது கல்வித் தகுதி, M.A.Ph.D.D.D. களப்பணியில் ஈடுபட அணக்கும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனத்தைத் துவக்கினார். அதன்பின் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் பற்றித்தான் முதலில் ஓரளவு குறிப்பிடும் நல்வாய்ப்பும் கிடைத்தது. இவர்களைப் போன்றோரைத்தானே இவ்வலைபூவின் தலைப்பும் ”மனித தெய்வங்கள்” என்று சுட்டிக் காட்டுவது முற்றிலும் பொருத்தமானதுதானே ?                   



30 ஆண்டுகள் தொண்டாற்றிய மனித தெய்வத்தை நமக்கு அறிமுகப் படுத்தியவரைத் ”தெய்வத்தின் தெய்வம்” என்றே சொல்லலாமல்லவா ? யார் அவர் ? கடந்த மூன்று ஆண்டுகளாக, மெய்யான மானுட சேவையில் ஈடுபடுவோரைத் தெரிந்தெடுத்து, ”மதுரா மாமனிதர்” என்ற பட்டத்தையும், பொற்கிழியாக ஒரு இலட்சத்தையும் கொடுத்துவரும், ”மதுரா டிராவல்ஸ்” நிறுவனர், வீ.கே.டி. பாலன் ! நான்காவது ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான், மதுரைப் பேராசிரியர், எஸ்.டி. நோவா.               

 

எந்த விளம்பரமும் இல்லாமல், ஆடம்பரமும் இல்லாமல், அரசியல் கலப்பில்லாமல், எளிய முறையில், 22-10-2012 காலை 10 முதல் 12.30 வரை, சென்னை சேப்பாக்கம், பத்திரிக்கையாளர் வளாகத்தில் விழா நிகழ்ந்தது. பரிசினை வழங்கியவர், இவ்விழாவானது வீ.கே.டி.பாலனின் அர்ந்தவப் புதல்வன், ஸ்ரீகரன் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.


4- ஆ ஆண்டு விழாவிர்கு, மனித தெய்வம்,  நெல்லை மாவட்டம், தென்காசியை அடுத்த, ஆய்க்குடியில் இயங்கும், அமர் சேவா சங்க நிறுவனர், தலைவர், எஸ்.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

 ”பாலம்” கல்யாணசுந்தரம், மூன்றாவது ஆண்டு ”மதுரா மாமனிதர்” பரிசு பெற்ற சகோதரி கெளசல்யா, சிவகாசி, தியாகி வ.உ.சி.முரசு. ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன் மற்றும் மதுரா டிராவல்ஸ் பணியாளர்கள், நிர்வாகிகள், எந்தவிதமான அழைப்பும் இன்றியே ஆண்டுதோறும் இவ்விழாவில் பங்கேற்பதையே ஓர் கெளரவமாகக் கருதும் அன்பு நெஞ்சங்கள், அவர்தம் குடும்பத்தார் முன்னிலையில், வீ.கே.டி. பாலன், நோவா அவர்களுக்குப் பரிசினை வழங்கினார்.
பாலம் கல்யாணசுந்தரம், வீ.கே.டி.பாலன், ஆய்க்குடி இராமகிருஷ்ணன், கெளசல்யா, விழா நாயகன் வீ.கே.டி பாலனின் வாரிசு ஸ்ரீகரன், திருமதி வி.கே.டி.பாலன்



”கவிதை உறவு” ஆசிரியர், ”கலைமாமணி” ஏர்வாடி, எஸ்.இராதாகிருஷ்ணன் நன்றி உரை  கூறினார்.வரவேற்புரை, தலைமை உரை, சிறப்புரை, நன்றி உரை ஆகியவற்றைத் தனியாகத்தான் எழுத வேண்டும். விரிவு கண்டு அஞ்சியே இத்துடன் முடிக்கப்பெறுகின்றது  இந்தப்பதிவு. 

      நன்றி உரை வழங்கும் கலைமாமணி எஸ். ஏர்வாடி இராதாகிருஷ்ணன்


அமர் சேவாசங்க  தலைவர், எஸ்.இராமகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள்

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் காண, கோஷம் போடவில்லை வீ.கே.டி. பாலன்.!

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு மதியம் செல்வோருக்கு உணவு உண்டு !

ஊழியர் எல்லோருக்குமே மதிய உணவு உண்டு விரும்பினால், இலவசமாய் !

நன்கொடை தரமாட்டார். திறமைக்கேற்ற வேலைதந்து பசிப்பிணிபோக்குவார்

பசியைப் பங்கிட்டுக் கொள்ளும் வீ.கே.டி.பாலன் போன்றோர் தோன்றட்டும்
                                                                                                                               வீதி எங்கும் !





0 comments:

Post a Comment

Kindly post a comment.