Friday, May 19, 2017

அகத்தியர் தேவாரத் ந்திரட்டு 25 திருப்பதிகங்கள் வரலாறு

         உ
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும்  சைவ  சமய ஆசிரியர் மூவரும், சுடருருவாகிய  சிவ பரம்பொருளே, முழு முதற்கடவுள் என்று உயிர்கல் அறிந்து  வழிபட்டு உய்யுமாறு அருளிச்செய்த  தமிழ் மறைகளாய  தேவாரம்  ஓரிலக்கத்து ஈராயிரந்  திருப்பதிகங்களை  உடையன. அவ இகளுள்  797 பதிகங்கள் ஒழித்து ஒழிந்தன. இறைவன் திருவுளப்பாங்கின்படி  இறந்து போயின. எஞ்சி நின்ற இவற்றைத்  திருவாரூரிலே  அரசாண்ட  அபயகுலசேகர  சோழ மன்னன்  வேண்டுகோளின்படி, திருநாரையூப்  பொல்லப்  பிள்ளையாரது  அருள்பெற்ற , நம்பியாண்டார் நம்பிகள், தில்லையிலே  பொற்சபையின் மருங்கிலே திருவறையிலே கண்டெடுத்து ஏழு  திருமுறைகளாக வகுத்து உலகிற்கு உதவியருளினார். இவ்வேழு  திருமுறைகளை அடங்கன் முறை என்று சொல்லப்பெறும். 

கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலே சிறந்து விளங்கிய சிவாய  முனிவரென்பார்  இவ் அடங்கன் முறையினது பெருமையையும்,  இதனை  நாடோறும் முறையோடு ஓதுபவர் வீடு பேறடைவர் என்பதையும் அறிந்து, நாடோறூம்  அவ்வாறு  ஓத  விழைந்தவர்.  ஆயினும் அது முற்றுப்  பெருமையினாலே, அவர்  தில்லையடைந்து பொற்சபையிலே  பெருமையினாலே அவர் தில்லையடைந்து பொற்சபையிலே ஐந்த்தொழில் இன்பக்கூத்தியல் இயற்றும் சிவபெருமானை வணங்கித் தமது கருத்து முற்றுப்பெறுமாறு  பன்னெடுங்காலந்த்  தவஞ்செய்தார். 

அதுகாலை சிவாலய முனிவனே நீ பொதிய மலையிலே உறையும் அகத்திய முனியவனைடையின்  உனது கருத்து முற்றுப்பெறும். என்று ஒரு வான் மொழி எழுந்தது. அதனைக்க்கேட்ட அவர் கூத்த பிரானை வணங்கி விடைபெற்றுப்  பொதியிலையடைந்து மூவாண்டு அருந்தவஞ்செய்தார். அகத்திய முனிவ்ர் அதற்கிறங்கி  வெளிப்பட்டு   அடங்கன் முறை அனைத்தையும் அவருக்கு எடுத்தியம்பிப் பொருள் அருளிச் செய்து அதனினின்றும் 25 திருப்பதிகங்களைத் திரட்டி
இவைகளையே முறையே ஓதின் அடங்கன்முறை முழுவதையும் ஓதியதின் ப்யன்கிடைகுமென்று கூறிக்கொடுத்து மறைந்தருளினார். சிவாலய முனிவர் அவ்வாறே அவ்விருபத்தைந்து பதிகங்களையும்  நாடோறும் நெட்ங்காலம்  ஓதிக் கொண்டிருந்து வீடுபேற்றையடைந்தனர்  

தொகுத்து எழுதியவர் :-
கலப்பாக்கம் சதாசிவசெட்டியவர்கள் பி.( 1925 ஆண்டு
திருச்சிற்றம்பலம்               

0 comments:

Post a Comment

Kindly post a comment.